தமிழில் ஜெ.ராம்கி***ஓர் அரசியல் மேதையின் சொல்லப்படாத கதைசற்றும் எதிர்பாராதவிதமாக நரசிம்ம ராவ் 1991-ல் இந்தியாவின் பிரதமரானபோது பொருளாதார நெருக்கடியாலும் உள்நாட்டுக் கலவரங்களாலும் தேசம் தடுமாறிக் கொண்டிருந்தது. சொந்த நாட்டு மக்கள் அவரை விரும்பியிருக்கவில்லை; கட்சியினர் அவரை நம்பகமான தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. நாடாளுமன்றத்தில் அவருக்குப் பெரும்பான்மை பலம் இல்லை. 10 ஜன்பத்தின் நிழலில் செயல்பட்டாகவேண்டியிருந்தது. இத்தனை நெருக்கடிகளுக்கு இடையிலும் ராவ் இந்தியாவை மறுமலர்ச்சி அடையச் செய்தார். உலக அரங்கிலும் தலை நிமிரச் செய்தார். ராவ் போல் குறைந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய சாதனையைச் செய்தவர்கள் உலக அரங்கில் யாருமே இல்லை.இதுவரை எங்கும் வெளியிடப்பட்டிராத நரசிம்ம ராவின் சொந்த ஆவணங்களைப் பார்க்கக் கிடைத்த அரிய வாய்ப்பின் மூலமும் நூற்றுக்கணக்கான சம கால அரசியல் தலைவர்கள், அதிகாரவர்க்கத்தினருடனான பேட்டிகள் மூலமும் உருவாகியிருக்கும் ராவின் முழுமையான வாழ்க்கை வரலாறு இது. இந்நூல், இந்தியப் பொருளாதாரம், அணு ஆயுதத் திட்டம், அயலுறவுக் கொள்கை, பாபரĮ