"உன் பெயர் என்னப்பா?""அவசியம் தெரியவேண்டுமா?""இதிலென்ன கோபம்? பெயர் என்ன என்றுதானே கேட்கிறேன்! வேறென்ன கேட்டுவிட்டேன்!""எதை வேண்டுமானாலும் கேளேன்; எனக்கென்ன? என் பெயர், ஏகாம்பரம்""நிஜமாகவா? ஏகாம்பரம் என்பதா உன் பெயர்!""ஏன், பிடிக்கவில்லையா, அந்தப் பெயர்? சரி, சதாசிவம்! இந்தப் பெயர் பிடிக்கிறதா?""அழகாகத்தான் இருக்கிறது, சதாசிவம் என்பது. ஏகாம்பரம் என்ற பெயரும் நல்ல பெயர்தான். நான் உன் பெயரை அல்லவா, கேட்கிறேன்!""ஓஹோ! ஏகாம்பரம், சதாசிவம் என்பவை என் பெயர் களல்ல - அப்படியானால் என்ன பெயரிட்டு வேண்டுமானாலும் என்னை அழைத்துக் கொள்ளய்யா! உனக்கு விருப்பமான பெயர் என்னவோ, அதைக் கூறிக்கொள்.""அதுவும் நல்ல யோசனைதான்! மாடசாமி என்ற பெயர் உனக்குப் பிடிக்கிறதா?""மாடசாமியா... என் பெயர் எப்படி உனக்குத் தெரிந்தது?""உன் பெயர், மாடசாமியா? நான் வேடிக்கையாகக் கேட்டேன், அது உண்மையாகி விட்டதே! மாடசாமி என்பது தான் உன் பெயரா? ஆருடக்காரன் போலல்லவா, நான் கூறிவிட்டேன். ஏதேது; நான் சொல்வதெல்லாம், அப்படியப் படியே உண்மையாகிவிடும் போலிக்கிறதே தேவவாக்கு என்கிறார்களே அதுபோல! மாடசாமி...!""என்னய்யா, ம
- | Author: C. N. Annadurai
- | Publisher: Nilan Publishers
- | Publication Date: May 01, 2025
- | Number of Pages: 00090 pages
- | Binding: Paperback or Softback
- | ISBN-10: 8198806954
- | ISBN-13: 9788198806956
- Author:
- C. N. Annadurai
- Publisher:
- Nilan Publishers
- Publication Date:
- May 01, 2025
- Number of pages:
- 00090 pages
- Binding:
- Paperback or Softback
- ISBN-10:
- 8198806954
- ISBN-13:
- 9788198806956