நாடோடிப் பாடல்களில் ஈடுபட ஈடுபட அவற்றில் நம் முடைய நாட்டுக்கே உரிய பண்பு எவ்வளவு தெளிவாகப் புலனா கிறது என்பதை உணர்கிறேன். காலந்தோறும் நம்முடைய வாழ்க்கை நிலைகள் மாறுகின்றன; தொடர்புகள் மாறுகின்றன. ஆனாலும், சில அடிப்படையான பண்புகள் மாறுவதில்லை. முன் காலத்தில் நாம் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றவில்லை; விளக்கெண்ணெய் விளக்கை ஏற்றினோம். மின்சார விளக்கு அப்போது இல்லை; ரெயில் இல்லை; மோட்டார் இல்லை; கட்டை வண்டிப் பிரயாணம் நடந்த போது இருந்த அமைதி இப்போது இல்லை. அமைதி யிலே பாட்டுப் பிறக்கும்; புற அமைதியிலே, கவிஞனுடைய அகம் கவி வெறியினால் கொந்தளித்து உணர்ச்சி வசமாகும்; அப்போது கவி மலரும். ஆதலின் கட்டை வண்டிக்காரன் பல பாட்டுக்களைப் பாடினான்; நாடோடியாக வழங்கும் பாடல்களைக் கற்றுக் கொண்டு பாடினான். ரெயில் வண்டி வந்த பிறகு அத்தனை பாட்டு இல்லை; ஆனாலும், ரெயில் வண்டிப் பாட்டும் நாடோடி உலகத்தில் உண்டு. காலத்தின் மாறுபாட்டால் வந்த ரெயிலுக்கும், மோட்டா ருக்கும், வெள்ளைக்காரனுக்கும், வக்கீலுக்கும் பாட்டுக்கள் இருக் கின்றன. இங்கிலீஷ் வார்த்தைகள்கூட இந்தப் பாட்டுக்களில் ஏறி யிருக்கின்றன. கால