முன்பு எழுதிய சிறுகதை தொகுப்புகளில் ஒரு சில பாத்திரங்கள், ஆசிரியனாக என்னை மட்டுமல்லாமல், வாசித்த பல ரசிகர்களையும் மனதளவில் பாதித்தது தெரியவந்தது. விளைவு இந்த சிறுகதைத் தொகுப்பு! அத்தகைய கதா பாத்திரங்களின் அருகில் நெருங்கி, விட்ட இடத்தி-லிருந்து தொடர்ந்து பயணித்து சுவையான கற்பனை சம்பவங்களுடன் புனையப்பட்ட சிறுகதைகள் இவை. இப்படியும் நிகழுமா என்பதை விட அப்படி நிகழ்ந்தால்...என்ற எண்ண ஓட்டங்களே எழுத்து வடிவில். தனியாகப் படித்தாலும் ஈர்ப்பும், முன் வெளியீட்டு தொகுப்புகளை படித்து விட்டு தொடர்ந்தால் அதைவிட அதிக ஈடுபாடும் ஏற்படும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. படிக்கும் வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். எழுத்துப்பணி தொடரும்.