இந்த விளம்பரம் எனக்குப் பிடிக்காத ஒன்றுதான் ஆயினும் என்ன செய்வது? நீங்கள்தான் இப்போதெல்லாம் விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட விளம்பரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்களே!'எழுத்தாளர்' என்றால் முன்னெல்லாம் எழுதாவிட்டால்கூட ஒரு கதர் ஜிப்பாவைத் தைத்துப் போட்டுக் கொண்டு விட்டால் போதும்; உடனே நீங்கள் அவரை எழுத்தாளர் என்று ஒப்புக்கொண்டு விடுவீர்கள். இப்போது அப்படியில்லை; நீங்கள் ஒருவரை எழுத்தாளர் என்று ஒப்புக் கொள்ள வேண்டுமானால் அந்த எழுத்தாளர் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது!முதலில் அவர் 'ஹிப்பி'களைப் பின்பற்றி முடி வளர்க்க வேண்டியிருக்கிறது; அப்படி வளர்த்த முடியை அவர் விதம் விதமாக அலங்கரித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்குப் பின் அவர் விதம் விதமாகச் சட்டை தைத்துப் போட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது; அந்த விதம் விதமான சட்டைகளுடன் விதம் விதமான போஸ்களில் படம் எடுத்து, விதம் விதமான பத்திரிகைகளில் அவற்றை வெளியிடுவதற்கு வேண்டிய ஏற்பாடும் செய்யவேண்டியிருக்கிறது!இவை மட்டுமா? விதம் விதமான பெண்களுடன் வேறு அவர் 'உலா' வர வே
- | Author: Vindhan
- | Publisher: Nilan Publishers
- | Publication Date: Jan 01, 2025
- | Number of Pages: 172 pages
- | Binding: Paperback or Softback
- | ISBN-10: 8198396608
- | ISBN-13: 9788198396600
- Author:
- Vindhan
- Publisher:
- Nilan Publishers
- Publication Date:
- Jan 01, 2025
- Number of pages:
- 172 pages
- Binding:
- Paperback or Softback
- ISBN-10:
- 8198396608
- ISBN-13:
- 9788198396600